நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் நேற்று காலை கைது செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்யப்படுகிறது என தகவல் வெளியானது.
இந்நிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் கிருஷ்ணா மனு
அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தகவல்