1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு..?

Q

ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு, நண்பன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் மூலமாக கொக்கைன் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு ஸ்ரீகாந்த் அடிமையாகி இருக்கிறார். அதிமுக நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது.

பெங்களூரில் இருந்து பிரதீப் குமார் என்பதை கடத்தி வந்து, பிரசாத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதனிடையே பிரசாத் தயாரித்த ஒரு படத்திற்காக ஸ்ரீகாந்த்-க்கு ரூ.10 லட்சம் சம்பள பாக்கி இருந்துள்ளது. இந்த சம்பளத்தை கேட்ட போதெல்லாம், பிரசாத் கொக்கைன் போதைப் பொருளை கொடுத்துள்ளார். 3 முறைக்கு மேல் பயன்படுத்திய பின், ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக கூறி இருக்கிறார்.

இதுதொடர்பாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலான கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை சோதனை மேற்கொண்ட போது, அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியாகி இருக்கிறது. இதன்பின் நீதிபதிகளிடம் நான் தவறு செய்துவிட்டேன் என்று புலம்பி இருக்கிறார்.

இதன்பின் ஸ்ரீகாந்த் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்.

சென்னையில் உள்ள கிருஷ்ணாவின் குடும்பத்தினரை அணுகி போலீசார் விசாரித்துள்ளனர். அதன்பின் குடும்பத்தினர் மூலமாக கிருஷ்ணாவை அணுகிய போலீசார், விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதன்பின் கிருஷ்ணா வருவதாக கூறிவிட்டு, அடுத்த சில நிமிடங்களில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளார். இதனால் கிருஷ்ணா தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறி இருக்கின்றனர். அதேபோல் கிருஷ்ணாவுக்கு அளிக்கப்பட்ட சம்மனுக்கு அவர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது

Trending News

Latest News

You May Like