பிரபல குணசித்திர நடிகர் கருணாகரனின் தந்தை காலமானார்..!
நடிகர் கருணாகரனின் தந்தையும், கேபினட் செயலக சிறப்புப் பிரிவின் ஓய்வுபெற்ற அதிகாரியான காளிதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். “தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகள் சேவையாற்றிய என் தந்தை இன்று உயிரிழந்தார் ” என்று இந்த துயரமான செய்தியை நடிகர் கருணாகரன் கனத்த இதயத்தொடு பகிர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சைப் பலனளிக்காமல் அவர் காலமானார். இன்று மாலை சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.