நடிகர் கமல்ஹாசன் ஒரு சங்கி தான்.. அமரன் படத்திற்கு திருமுருகன் காந்தி எதிர்ப்பு..!
அமரன்திரைப்படத்திற்கு திருமுருகன் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், அமரன் திரைப்படத்தை பொறுத்தவரை முகுந்த் என்ற ராணுவ வீரரை கொண்டாடும் விதமாக கதையை சொல்வதற்கு பதிலாக அவருக்கு எதிரணியிலேயே ஒட்டு மொத்த காஷ்மீர் மக்களையும் எதிரிகளாக நிறுத்தக் கூடியது என்பது கண்டனத்திற்கு உரியது..
ஒரு தேசிய இனத்தை எதிரிகளாகவும்.. அந்த தேசிய இன மக்கள் வெளிப்படுத்துகின்ற உரிமை போராட்டங்களை கொச்சைப்படுத்துவதாக ஒரு சார்ப்பு உடையதாக.. காஷ்மீர் மக்களின் தரப்பை பற்றி பேசாமல்.. ஒரு தரப்பு நியாயத்தை பற்றி மட்டுமே சொல்லி.. காஷ்மீர் மக்களை எதிரிகளாகவே சித்தரிக்கக்கூடிய போக்கு இந்த படத்தில் நுணுக்கமாக காட்டப்படுகிறது.
எனவே அந்த படத்தின் மையக்கருவான காஷ்மீர் குறித்த அரசியலை கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உள்ளது. அங்கு நீண்ட காலமாக ஜனநாயக போராட்டங்களை நடத்துகின்ற தலைவர்களை கூட, எதிரிகளை போல சித்தரிப்பது என்றபோக்கு எல்லாம்.. இந்த படத்தில் விரிவாக காட்டப்பட்டுள்ளது.
இதில் என்ன கொடுமை என்றால், காஷ்மீரில் போராடிய யாஷின் மாலிக்கை கூட்டி வந்து கூட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான் படத்தை பாராட்டுவது தான்.. வெட்கமாக இல்லையா.. ஒரு தேசிய இன விடுதலையை பற்றி.. தமிழ் இனம், தமிழ் இனம் என்று வசூல் செய்தது மட்டுமில்லாமல்.. அதை பற்றி எந்த போராட்டத்தை 15 வருடமாக நடத்தாமல்.. இப்போது காஷ்மீர் மக்களுக்கு எதிராக படம் வந்திருக்கிறது.. அந்த படத்தை எடுத்தவரை கட்டித்தழுவி.. அப்படி இருக்கிறது.. இப்படி இருக்கிறது என்கிறாரே சீமான்... அவருக்கு வெட்கமாக இல்லையா?
படத்தில் சண்டைக்கு போகும் முன் முகுந்த் வரதராஜன் ஜெய் பஜ்ரங் பலி என்று சொல்வது போல் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ் முழக்கமான ஜெய் பஜ்ரங் பலியை எப்போது முழுக்கமிட்டார்கள். ராணுவத்தில் பல்வேறு மதத்தினர் இருக்கின்றனர். அங்கு ஜெய் பஜ்ரங் பலி என சொல்வதில்லை. அமரன் திரைப்படம் ராணுவத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான படமாக இருக்கிறது.
பல காலமாக சொல்லி வருகிறோம். நடிகர் கமல்ஹாசன் என்பவர் ஒரு சங்கி தான்.. இஸ்லாமிய வெறுப்பு தொடர்ச்சியாக கக்கிவரக்கூடிய நபர் . வேறு ஒரு கதையை இந்துத்துவா அம்சத்துடன் எடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் ஒப்புதல் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது. கதை வந்துவேறாக இருக்கலாம். ஆனால் சங்கித்தனமாக எடுக்கப்பட்ட திரைப்படம்.. தமிழகம் சார்ந்த கதை எடுக்க வேறு நிகழ்வுகளே கமலுக்கு கிடைக்கவில்லையா? மீனவர் மரணத்தையும், அவர் மனைவி படும் துன்பத்தையும் படமாக எடுக்கலாமே? கமல்ஹாசன் சங்கித்தமான படங்களை தான் எடுக்கிறார். இல்லையென்றால் சாதியை தூண்டும் படங்களை எடுக்கிறார்." இவ்வாறு திருமுருகன் காந்தி ஆவேசமாக கூறினார்.