எளிமையாக நடந்த நடிகர் ஜெயராம் மகள் திருமணம்..!

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயராம். தனது தனித்துவமான நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தையே தன்பக்கம் ஈர்த்தவர்.இவருக்கு காளிதாஸ் என்ற மகனும் மாளவிகா என்ற மகளும் உள்ளார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகிறார்.சமீபத்தில் தனது காதலியுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில்,ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்னீத் கிரீஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நவ்னீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக பெரிய கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவரும் மாளவிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்றது.
குருவாயூரில் எளிமையாக நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தை அடுத்து நடக்கும் ரிசப்ஷனில் நண்பர்கள், திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயராம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரது மகள் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Capturing the union of love and tradition at the wedding celebration of Malavika, daughter of actors Jayaram and Parvathy, with her beloved Navaneeth. 💍✨ #MalavikaJayaram #AswathiJayaram #Jayaram #Navaneeth#MalavikaNavaneethWedding #LoveAndTradition #CelebratingHappiness… pic.twitter.com/bIHGUpJsFK
— SIIMA (@siima) May 3, 2024