1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகருக்கு 2 ஆவது திருமணம்..!

1

தமிழ், தெலுங்கில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர்.

இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார். அதன்படி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடைபெற்றது. இருவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின்  வீட்டில் வைத்து எளிய முறையில் நிச்சியதார்த்த விழா நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று  கூறப்படுகிறது.

தற்போது நிச்சியதார்த்த புகைப்படங்களை நாகர்ஜுனா தனது சோசியல் மீடியாவில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது நாக சைதன்யாவுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.


 

Trending News

Latest News

You May Like