1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் தர்மேந்திரா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் விளக்கம்

1

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தார்.

இந்நிலையில் பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாக செய்தி வெளியானதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

கடந்த சில நாள்களாக அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால், அந்த மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தார்.

இந்த நிலையில், தர்மேந்திராவின் உடல்நிலை குறித்து அவரது மனைவியும் மக்களவை உறுப்பினருமான ஹேமமாலினி தமது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், “என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், பொறுப்புமிக்க செய்தி ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பமுடியும். இது மிகவும் பொறுப்பற்ற செயல். எங்கள் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளியுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோலும் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார். குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like