நடிகர் தனுஷ் கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் இத்தனை கோடியா ? ஒரு சொகுசு காரே வாங்கலாம்..!
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். குறிப்பாக நயன்தாரா அதில் பங்கேற்றார். முன்வரிசையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதே வரிசையில் தனுஷூக்கும் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை.
அந்த விழாவில் பல ஆண்டுகள் பின்னர் தனுஷூம் சிம்புவும் சந்தித்துக் கட்டி அணைத்துக்கொண்ட காட்சிகள் அதிக கவனத்தைப் பெற்றன. ஆகாஷ் பாஸ்கரன் 'நானும் ரவுடிதான்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவர் இப்போது தனுஷ் நடக்கும் 'இட்லி கடை'படத்தைத் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில்தான் தனுஷ் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் மீது அனைவரின் கவனம் பதித்துள்ளது. அவர் கட்டி இருந்த வாட்ச் விலை என்ன இருக்கும்? அதன் மதிப்பு என்ன? என்று பலரும் சமூக ஊடகங்களில் விவாதிக்க தொடங்கி உள்ளனர்.
தனுஷ் கையில் அணிந்திருந்த Rolex Day-Date 40 watch விலை ஒரு சொகுசு காரின் விலைக்கு ஈடானது என்றும் அந்த வாட்ச் வாங்கி பணத்தை வைத்து மும்பையில் ஒரு 2BHK பிளாட் வாங்கிவிடலாம் என்றும் தெரியவந்துள்ளது. அந்தளவுக்கு ஆடம்பரமான கடிகாரத்தைத்தான் ஆகாஷ் பாஸ்கரன் மணவிழாவுக்கு தனுஷ் அணிந்து வந்துள்ளார்.
ரோலக்ஸ் டே-டேட் கடிகாரம் என்பதே ஒரு ஆடம்பரமான வாட்ச். அதை மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே கட்டக்கூடியது. இது அரேபிய எண்களால் அலங்கரிக்கப்பட்டது. கூடவே ஆலிவ்- க்ரீன் டயல் உள்ளது. மேலும் ஜொலிக்கும் பிளாட்டினம் தோற்றதைக் கொண்டுள்ளது. தனுஷ் அணிந்திருந்தது Rolex signature fluted bezel மாடல் கடிகாரம். இது தனித்தன்மை மிக்க கடிகாரம். அதன் விலை என்ன என்பதைப் பார்ப்போம். அதுதான் ஆர்வத்தைக் கிளப்பும் செய்தியாக உள்ளது. இதன் விலை 160,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1,35,09,000 ஆகும். ரூ. 1.35 கோடி வரை வரும்.