வைரல் காய்ச்சலால் படுத்த படுக்கையான நடிகர் தனுஷ் - போட்டுடைத்த பயில்வான்..!
பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு சினிமா நடிகர்கள் குறித்த சில தகவல்களை கூறியுள்ளார்.,அந்த வீடியோவில் நடிகை ஸ்ருதி ஹாசன் செலுங்கில் நடித்துக் கொண்டிருந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்ததுடன் அதற்காக சில காரணங்களையும் தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் அவரது 50வது திரைப்படமான ராயனின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்தும் தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் தற்போது, அவர் இட்லி கடை படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இந்தப் படத்தில் அவருடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு சமயத்தில் அதை பாதியில் நிறுத்தி விட்டு அமெரிக்கா சென்று வந்தார்.
இதுகுறித்து விசாரிக்கையில் அவருக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறினர். அவரால் சண்டைக் காட்சிகளில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதாம். இப்போது வரை அவருக்கு காய்ச்சல் குறையவே இல்லையாம்.,இந்தக் காரணங்களால் தற்போது இட்லி கடை படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தனுஷ் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறாராம். மேலும், இட்லி கடை படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் நடக்கலாம் என தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார்.,