உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்..!
நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.
டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ். நகைச்சுவை, குணச்சித்திரம் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர் ஆவார்.