பிரபல நடிகர் பாபி சிம்ஹாவிற்கு கொலை மிரட்டல்..! நடிகரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை..?

நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலில் உள்ள பேத்துபாறையில் தனது பெற்றோருக்காக வீடுகட்டி வருகிறார். ஒப்பந்ததாரர் ஜமீர் என்பவர் கட்டுமான பணியை மேற்கொண்டு வந்தார். ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர்.
கட்டுமான பணிகளுக்காக ஜமீரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல் ஜமீர் தன்னை ஏமாற்றிவிட்டதாக பாபி சிம்ஹா புகார் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக கேட்டதற்கு ஒப்பந்ததாரர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மகேந்திரன் என்பவர் என்னை மிரட்டுகிறார். நடிகரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? இந்த பிரச்னையை தீர்க்க தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.