1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்..!

Q

சேலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பெஞ்சமின். இவர் பகவதி, சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, ஆட்டோகிராஃப், ஐயா, திருப்பதி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவனிக்கத்தக்க பாத்திரங்களில் நடித்துள்ளார். 'திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்திருந்தார் பெஞ்சமின். 'வெற்றிக்கொடி கட்டு' படத்தின் மூலம் அறிமுகமான பெஞ்சமின், வடிவேலுவோடு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஆவார். விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். 

நடிகர் பெஞ்சமின், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். பெஞ்சமினுக்கு, திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் சால்வை அணிவித்து, கட்சிக்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். திமுகவில் இணைந்தது பற்றிப் பேசியுள்ள நடிகர் பெஞ்சமின்,'மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like