1. Home
  2. தமிழ்நாடு

பிறந்தநாளில் இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்..!

Q

தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, இருக்கும் நடிகர் அருண் விஜய் இன்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 

 

1995ல் சுந்தர் சி இயக்கிய முறை. மாப்பிளை படத்தில் கதாநாயகனமாக அறிமுகமானார். அப்போது அவருக்கு 18 வயது மட்டுமே ஆகியிருந்தது. இதனால், தமிழ் சினிமாவின் இளம் வயது ஹீரோ என்னும் பெருமையை பெற்றார்.

 

அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும், எந்தவொரு படங்களும் மிகப்பெரிய ஹிட் ஆகவில்லை. எனவே, அருண் குமார் எனும் பெயரை அருண் விஜய் என மாற்றி படங்களில் நடிக்க தொடங்கினார்.

பெயர் மாற்றம் அவருக்கு நல்ல பாசிட்டிவ் வைப் கொடுத்தது.

அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. மலை மலை, மாஞ்சா வேலு, குற்றம் 23, என்னை அறிந்தால், தடம் போன்ற படங்கள் ஹிட் அடித்தது.

என்னை அறிந்தால் படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது. ஒரே படத்திலே நார்வே தமிழ் திரைப்பட விழா, எடிசன் விருது மற்றும் சைமை விருதுகளை அருண் விஜய் பெற்றார்.

நடிப்பில் கலக்கிய அருண் விஜய்,2015 In Cinemas Entertainment எனும் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். இதன் மூலம் திறமையான இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

2006ல் தயாரிப்பாளரின் மகள் ஆர்த்தியை அருண் விஜய் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவரது மகன் அர்ணவ்- வுடன் இணைந்து Oh My Dog படத்தில் நடித்தார்.

 இன்று தனது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தார் நடிகர் அருண் விஜய்.

Trending News

Latest News

You May Like