நடிகர் அர்ஜுன் இயக்குநர் பி.வாசு உள்ளிட்டோருக்கு கெளரவ முனைவர் பட்டம்..!
டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
பொறியியல் தொழில்நுட்பம் மருத்துவம் பல் மருத்துவம் செவிலியர் துறை உணவு சமையல் கலை மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட கல்வித்துறையை சேர்ந்த சுமார் 4000 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் , நடிகர் அர்ஜுன் மற்றும் இயக்குனர் பி வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விஞ்ஞானி ஸ்ரீனிவாச மூர்த்தி, இயக்குநர் பி.வாசு, நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல் முருகன், “கிண்டியில் மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் டாக்டர்கள் இருக்கின்றனர். கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நாம் பார்த்தோம். அதிலிருந்து கூட நாம் பாடம் கற்கவில்லை. தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கும் மருத்துவர்களுக்கும், பணி பாதுகாப்பு இன்று இருக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக அரசு உரிய பாதுகாப்பினை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் பி வாசு, “எனக்கும் எனது நண்பரும் சிறந்த நடிகருமான அர்ஜுனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் முகத்தை எனது தந்தை 300 தடவையாவது தொட்டிருப்பார். எம்ஜிஆரின் ஒப்பனையாளராக எனது தந்தை இருந்தது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட எம்ஜிஆர் பெயர் கொண்ட பல்கலைக்கழகத்தில் இந்த டாக்டர் பட்டத்தை நான் பெறுவதற்கு அதன் வேந்தர் ஆன ஏசி சண்முகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
பின்னர் பேசிய நடிகர் அர்ஜுன்,”டாக்டர் பட்டம் பெருமளவிற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கு பொறுப்பு மட்டும் கூடியுள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை வழங்கியதற்காக ஏசி சண்முகம் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன்” என்று பேசினார் .
தொடர்ந்து பேசிய அவர், இந்த இனிய நாளில் எனது பெற்றோரை நினைவுக்கூற விரும்புகிறேன்.. அதேபோல இந்த திரை உலகில் என்னை அறிமுகம் செய்து வைத்த ராமநாராயணன் அவர்களையும் நினைவுக்கூற விரும்புகிறேன்.. பெருமை மிகுந்த இந்த கல்வி நிறுவனத்திடம் இருந்து பெருமைமிக்க முனைவர் பட்டம் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.
திரை உலகில் 45 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன்.. இந்த துறை அதிக பாடங்களை எனக்கு வழங்கியுள்ளது. நிஜ வாழ்விலும் இந்த துறை அதிக பாடங்களை கற்பித்து உள்ளது.
நல்ல கணவராக, அப்பாவாக, நண்பராக, மனிதராக இருக்க இந்த திரை துறை பாடம் கற்றுக்கொடுத்தது. 1989-90 காலங்களில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான பணியாற்றினேன்.
அப்போது சில படங்கள் தோல்வியடைந்தது. அப்போது Flop star ஆக மாறினேன். பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை
அப்போது, என் அப்பா சொல்லிய வார்த்தை நினைவிற்கு வந்தது. கீழே விழுந்தால் பிறர் வந்து கை கொடுக்க வேண்டும் என நினைக்கக்கூடாது. தானாக உயர்ந்து நிரூபிக்க வேண்டும் என்றார்.
அப்போது படங்களை இயக்கவும் தயாரிக்கவும் துவங்கினேன்.. அப்போது யாருக்கும் என்மீது நம்பிக்கை இல்லை. Every Great story has twists and challenges இதுவே எனக்கு கிடைத்த அனுபவம்.
தோல்விக்கு அஞ்சாதீர்கள். ஒவ்வொரு தோல்வியும் பெரிய வெற்றிக்கான முதற்படி தான் என்று நடிகர் அர்ஜுன் பேசினார்.
சென்னையில் நடைபெறும் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விஞ்ஞானி ஸ்ரீனிவாச மூர்த்தி, இயக்குநர் பி.வாசு, நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்@Murugan_MoS @office_murugan pic.twitter.com/MzRF1r19PP
— DD Tamil News (@DDTamilNews) November 17, 2024