நடிகரும் பிரபல கராத்தே வீரருமான ஷிஹான் ஹூசைனி காலமானார்..!

ஷிஹான் ஹூசைனி கே. பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான அவர், நடிகர் விஜயின் பத்ரி படம் மூலம் பலரின் கவனம் ஈர்த்தார். 400க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ளார்.
அண்மைக்காலமாக அரிய வகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஷிஹான் ஹூசைனி அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியில் இருந்து சிகிச்சைக்காக ரூ.5. லட்சம் வழங்கப்பட்டது.
இந் நிலையில், சிகிச்சை பலனின்றி அதிகாலை (மார்ச் 25) 1.45 மணியளவில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 நாட்களாக அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அவரது மரணத்தை அறிந்த திரையுலகத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்துள்ளனர்.
முன்னதாக, ஷிஹான் ஹூசைனி தமது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்திருந்தார்.