1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் அவரது தந்தை மர்ம கும்பலால் அடித்து கொலை..!

1

தந்தை மற்றும் மகன் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் ஷண்டோ கானின் தந்தை செலிம் கான் வங்கதேச அவாமி லீக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் என்று தகவல் தெரிவிக்கின்றன. அடித்துக்கொல்லப்பட்ட வங்கதேச நடிகர் ஷண்டோ கான் 2019 ஆம் ஆண்டில், உத்தம் ஆகாஷ் இயக்கிய 'பிரேம் சோர்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். புபுஜான், பிக்கோவ், துங்கியாபரார் மியா பாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கௌஷானி முகோபாத்யாய்க்கு ஜோடியாக பிரியா ரே படத்தில் நடித்தார் ஷாண்டோ கான்.

செலிம் தயாரித்த வங்தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான துங்கிபாராவின் மியா பாயில் அவரது மகன் ஷாண்டோ கான் நடித்தார். சந்த்பூர் சதர் உபாசிலாவைச் சேர்ந்த லக்ஷ்மிபூர் மாடல் யூனியன் பரிஷத் தலைவராகவும் பாலுகேகோ செலீம் கான் இருந்துள்ளார். 

செலீமும் அவரது மகன் சாந்தோவும் திங்கள்கிழமை சந்த்பூரிலிருந்து தப்பிச் செல்லும் போது பலியா யூனியனில் உள்ள ஃபரக்காபாத் பஜாரில் ஒரு கும்பல் மோசமாக தாக்கத் தொடங்கியது. ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பினர். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் ஒரு கும்பல் தாக்கியதில் சந்த்பூரின் பகாரா பஜாரில் சலீம் கான் மற்றும் அவரது மகன் சாந்தோ கான் இருவரும் கொல்லப்பட்டனர். சாந்தா கானின் மரணத்தை அவரது மாமனார் எம்ஐ மோமின் கான் உறுதிப்படுத்தி உள்ளார். 

Trending News

Latest News

You May Like