நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை ஓவர் டேக் செய்த அஜித்தின் விஸ்வாசம் !!

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை ஓவர் டேக் செய்த அஜித்தின் விஸ்வாசம் !!

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை ஓவர் டேக் செய்த அஜித்தின் விஸ்வாசம் !!
X

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் , பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தி நடைமுறையில் உள்ளது. அது போல் இந்தியாவில் இதுவரை 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பலரும் வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். பொழுதுகளை கழிக்க தொலைக்காட்சி , மொபைல் தான் பார்த்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் புதுப் புது திரைப்படங்கள் போடப்படுகிறது. சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படமும் , ரஜினி நடித்த தர்பார் திரைப்படமும் ஒளிபரப்பானது. மக்கள் வீட்டில் முடங்கியிருப்பதால் டி.ஆர்.பி எகிறும் என எதிர்பார்க்கப்பட்டதாம்.

ஆனால், அது ஏமாற்றத்திலே முடிந்துள்ளது. 1,45,93,000 புள்ளிகளை மட்டுமே டி.ஆர்.பி. யில் தர்பார் பெற்றுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட விஸ்வாசம் 1,81,43,000 தடப்பதிவுகளை பெற்றது. அதேபோல், சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட காஞ்சனா 3 திரைப்படம் 1,51,84,000 பதிகளை பெற்றுள்ளது.

இத்தனைக்கும் காஞ்சனா 2 இதற்கு முன்பே ஒளிபரப்பான திரைப்படம்தான். அஜித் நடித்த விஸ்வாசம், லாரன்ஸ் நடித்த காஞ்சனா 3 படங்களை விட ரஜினி நடித்த தர்பார் திரைப்படம் குறைந்த பதிவுகளையே பெற்றுள்ளது. அதேநேரம், ஹிந்தி டப்பிங்கில் வெளியான தர்பார் 1,27,34,000 பதிவுகளை பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இது ரஜினி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newstm.in

Next Story
Share it