நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்து..?
கடந்த வருடம் அஜித்தின் 'துணிவு' படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே 'ஏகே 62' அறிவிப்பெல்லாம் வெளியானது. இதனால் கடந்தாண்டே அஜித்தின் இரண்டு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கதையில் சிக்கல், இயக்குனர் மாற்றம் என 'ஏகே 62' பட துவக்கமே பல பிரச்சனைகளில் சிக்கியது.
இதனால் இப்படம் டிராப் என்றே இணையத்தில் செய்திகள் பரவி ஆரம்பித்தன. இதனையடுத்து ஒரு வழியாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் துவங்கியது. இதனால் அஜித், திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட மொத்த படக்குழுவும் அங்கு முகாமிட்டனர். இதனையடுத்து 'விடாமுயற்சி' படப்பிடிப்பு அங்கு முழு வீச்சில் நடந்தது.
இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ வீடியோ..
விடாமுயற்சி பட சூட்டிங்கின் போது நடிகர் அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளான அதிர்ச்சி காட்சிகள் வெளியீடு...!! #AjithKumar #Ajith #vidamuyarchi #StuntVideo #accident #tnrepublic pic.twitter.com/1wuPEQzOUz
— TNRepublicnews (@TNRepublicnews) April 4, 2024