600 கி.மீ...பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித் !! வைரலாகும் புகைப்படம்..

600 கி.மீ...பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித் !! வைரலாகும் புகைப்படம்..

600 கி.மீ...பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித் !! வைரலாகும் புகைப்படம்..
X

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் அஜித். படத்தில் ஹீமா குரேஷி நாயகியாக நடிக்கிறார். கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். கொரோனா காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு சமயத்திற்கு முன் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் அஜித் சென்னை செல்வதற்கு விமான டிக்கெட்டுகள் தயாராக இருந்துள்ளது.

ஆனால், தனது உதவியாளரிடம் கூறி விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பைக் மூலம் ஹைதரபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார் அஜித். அஜித் ஒரு பைக் ரேசர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான்.

நீண்ட தூரம் பைக் ஓட்டி செல்வது அஜித்துக்கும் மிகவும் பிடித்தமான ஓன்று. இந்நிலையில்தான் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு சுமார் 600 கிலோமிட்டர் பைக் ஓடிச்சென்றுள்ளார் அஜித்.

Newstm.in

Next Story
Share it