1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்களுக்காக உருக்கமாக பேசிய நடிகர் அஜித்..!இப்போ இதுதான் டிரெண்டிங்!

Q

துபாயில் நடைபெறும் 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கார் ஓட்டப் போவதில்லையென நடிகர் அஜித் குமார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கார் பந்தயத்தில் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாழ்க்கை முழுவதும் கார் பந்தயம் எனக்கு ஒரு பேஷனாக இருந்தது. நிறைய ரசிகர்கள் நேரில் வந்துள்ளனர்.
மிகவும் எமோஷனலாக உணர்கிறேன். நான் சொல்ல வேண்டிய விஷயம், சொல்லப்போற விஷயம் ஒன்னே ஒன்னு தான்.
நீங்கள் அனைவருக்கும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும், மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் எனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள்.
நேரத்தை வீணடிக்காதீர்கள். நன்றாகப் படியுங்கள். வேலைக்குச் செல்லுங்கள். கடுமையாக உழைத்து வேலை பாருங்கள்.
நமக்குப் பிடித்த விஷயங்களில் நாம் கலந்துகொள்ளும்போது வெற்றி பெற்றால் மகிழ்ச்சி. அதே சமயம் தோல்வி அடைந்தால் சோர்ந்து போகாதீர்கள். போட்டி மிகவும் முக்கியம். மன உறுதி, அர்ப்பணிப்பை ஒருபோதும் விட்டுக்கொடுக்காதீர்கள். உங்கள் அனைவரையும் அளவு கடந்து நேசிக்கிறேன்.
கார் ரேஸ் குறித்து விளக்கிய அவர், "வழக்கமான கார் ரேஸுக்கும் இந்த 24 மணி நேரப் போட்டிக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. வழக்கமான கார் ரேஸில் ஒரு காருக்கு ஒரு டிரைவர் தான். ஆனால், இதில் ஒரு காருக்கு 2,3 டிரைவர்கள் இருப்பார்கள். எனவே, இதில் எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. வண்டியை பாதுகாக்க வேண்டும்.. அதேநேரம் வேகமாகவும் ஓட்ட வேண்டும்..
சினிமாவை போலவே இதிலும் டிரைவர், மெக்கானிக் என கூட்டு முயற்சி தேவை. அனைவரும் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்தாலே போதும் ரிசல்ட் தானாக வரும். ரசிகர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். ப்ளீஸ், சண்டை போடாதீர்கள். வாழ்க்கை மிகவும் சிறியது. மகிழ்ச்சியாக இருங்கள்" என்று குறிப்பிட்ட அவர் குடும்பத்தைப் பாருங்கள் என்பதை அழுத்தமாக 3 முறை சொல்லி தனது வீடியோவை நிறைவு செய்தார்.


 


 

Trending News

Latest News

You May Like