வீடு திரும்பினார் நடிகர் அஜித்..!
சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜீத்குமாருக்கு காதுக்கு அருகில் மூளைக்கு செல்லக்கூடிய நரம்ப் வீக்கம் அடைந்ததால் அதனை சரி செய்யும் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும், இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் என்று அஜீத்மாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார். மேலும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், திட்டமிட்டப்பட்டி அடுத்த வாரம் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கிறகு கிளம்பி விடுவார் என்பது தான் நிஜமே தவிர நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் 3 மாத ஓய்வு என்பதெல்லாம் தவறான தகவல் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, நடிகர் அஜித் விரைவில் நலம் பெற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.