1. Home
  2. தமிழ்நாடு

இந்த படங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன் - நடிகர் அஜித் ஓபன் டாக்..!

Q

நடிகர் அஜித்குமார், 'குட் பேட் அக்லி' பட வெற்றியை அடுத்து கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 6 மாதம் கார் ரேஸ், 6 மாதம் சினிமா என பிளானிங் உடன் பயணித்து வருகிறார். அவரின் 'அஜித்குமார் ரேஸிங்' அணி இரண்டு முறை மூன்றாவது இடமும், ஒரு முறை இரண்டாவது இடமும் பிடித்துள்ளது. கடந்த வாரம் பெல்ஜியமில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது. தற்போது பிரான்சில் நடந்து வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'எப்1' என்ற கார் பந்தயத்தை மையப்படுத்திய திரைப்படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அதை குறிப்பிட்டு கார் பந்தயத்திற்கு இடையே அஜித்குமாரிடம் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். ''நீங்களும் கார் ரேஸை மையப்படுத்திய நடிப்பீர்களா?'' என அஜித்திடம் கேட்டதற்கு, ''பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ், எப்1' படங்களின் தொடர்ச்சியில் நடிப்பதற்கு ஆசை, பொதுவாகவே நான் நடிக்கும் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நானே நடித்து வருவதால், அதுப்போன்ற படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் நடிப்பேன். எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிலளித்தார் அஜித்.

Trending News

Latest News

You May Like