இந்திய இராணுவத்துடன் இணையும் நடிகர் அஜித்குமார்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக விமானவியல் துறை சார்பாக தக்சா நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.கடந்த 2018ம் ஆண்டு தக்சா நிறுவனம் உலக அளவில் நடைபெற்ற ட்ரோன் போட்டியில் பங்கெடுத்தது பல மைல்கல்களை எட்டியது.கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு ட்ரோன்களை தயாரிக்கவும் தேர்வாகியிருந்தது.
இந்த நிலையில் இந்திய இராணுவத்திற்கு 165 கோடி ரூபாய் மதிப்பிலான 200 ட்ரோன்களை தயாரித்து வழங்க தக்சா நிறுவனம் ஒப்பந்தமாகியுள்ளது.அடுத்த 12 மாதங்களில் இந்த ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்திய இராணுவத்துடன் இணைந்து ஆலோசனை பணிகளை அஜித்குமார் மேற்கொள்ளவுள்ளார்.