1. Home
  2. தமிழ்நாடு

பிரபல கிரிக்கெட் வீரர் பிறந்தநாள் விழாவில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த நடிகர் அஜித்குமார்..!

Q

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான நடராஜனுக்கு இன்று (ஏப்ரல் 04) தனது 33-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
இதற்காக, சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சார்பில் நடராஜனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகளை செய்திருந்தது. நேற்று (ஏப்ரல் 03) நள்ளிரவு 12.00 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், முத்தையா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். நடிகர் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு கேக் ஊட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் தற்போது டிரண்டாக்கி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like