1. Home
  2. தமிழ்நாடு

வாழ்த்து மழையில் நடிகர் அஜித்.. துணை முதல்வர் உதயநிதியை அடுத்து அஜித்தை பாராட்டிய டிஆர்பி ராஜா...!

1

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளவிருக்கிறார். இந்தப் பந்தயத்துக்கான பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை நடிகையும் அவருடைய மனைவியுமான ஷாலினி வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். 

துபாயில் நடைபெற உள்ள ஜி.டி.3 கார் பந்தய போட்டிகளில் அஜித் பங்கேற்க இருப்பதை அடுத்து, அஜித் குமார் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதை தொடர்ந்து துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 இந்த நிலையில், வர்த்தகத் துறையின் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை உலகளவில் செல்கிறது. இதற்காக நடிகர் அஜித் குமாருக்கு ஸ்பெஷல் நன்றி" என வாழ்த்தியிருக்கிறார்.
 


 

Trending News

Latest News

You May Like