1. Home
  2. தமிழ்நாடு

இளம் நடிகருடன் பைக் ரைட் சென்றுள்ள நடிகர் அஜித்..! யார் அந்த நடிகர் தெரியுமா ?

1

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அஜித் அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை கோளாறு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி அவரின் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்தது.

உடல்நிலை தற்போது சரியான நிலையில், தனது நண்பர்களுடன் மீண்டும் பைக் ரைடு சென்றுள்ளார் நடிகர் அஜித்குமார் . நேற்று அவர் பைக் ரைடு சென்ற வீடியோ மற்றும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக நிலையில் தற்போது இந்த ரைட் குறித்து மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் உடன் நடித்துள்ள நடிகர் ஆரவ், தற்போது அவருடனே பைக் ரைடு சென்றுள்ளார். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like