பிரபல நடிகர் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
நடிகர் ஷாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்திற்கு ரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு இருப்பதை கண்டறிந்து ஆஞ்சியோபிளாஸ்டி செய்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.