1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் அடடே மனோகர் காலமானார்..!

1

சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள், 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பார் மனோகர். 

மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில், பொறுப்பான துறையில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார் மனோகர். மேலும், பல தொலைக்காட்சி மற்றும் வானொலி நாடகங்களையும் இவர் எழுதி நடித்துள்ளார். அதோடு, ஏராளமான நாடகங்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.'அடடே மனோகர்’ என்ற பெயரில் 1986 மற்றும் 1993-ஆம் ஆண்டில் அப்போதைய டிடி தொலைக்காட்சியில் நாடகம் வெளியானது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவர் எழுதி நடித்த தொடரான  அடடே மனோகர்  தொடர், இவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத்தந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு (பிப்.28) சென்னையில் இவர் காலமானார். இதையடுத்து, இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து மனோர் உடல் சென்னை குமரன்சாவடியில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.ஏராளமான நாடகங்கள் மற்றும் படங்களின் வாயிலாக, நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த இவரின் மறைவு, சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like