தஞ்சை பெரிய கோயில் மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும்..!

சோழர் காலத்தில் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோயில் உலகப்புகழ் பெற்றது. இந்த கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்றும் வெளிநாட்டில் இருந்து வருவோர் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு சோழர்களின் கட்டடக்கலை சிறப்பம்சமாக விளங்கி இருக்கிறது தஞ்சை பெரிய கோயில்.
இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே தஞ்சை பெரிய கோயில் குறித்து வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதற்கு இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது
.தஞ்சை பெரிய கோயில் தொடர்பாக, தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோயில் சன்னதியின் பின்புறம் மத்திய தொல்லியல் துறையினர் பராமரிப்புப் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், திருக்கோயிலை சிதைக்கும் வகையில் அறநிலையத்துறை ஈடுபடுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ள அரசு, அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.