அதிரடி முடிவு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு செக் வைக்கும் தமிழக அரசு!!
கொரோனா தடுப்பூசி பணிகளை முடுக்கி விடும் நோக்கில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெற்று வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம், தற்போது, வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே பொது இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை உயரும் என கூறப்படுகிறது.
இது குறித்து சோதனை நடத்தும் போது முதல்முறை சிக்கினால் எச்சரிக்கப்படுவர், மீண்டும் தடுப்பூசி போடாதது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது.
newstm.in