தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்தினால் நடவடிக்கை!

தமிழகத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில்,1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் (21.09.20) செப்டம்பர் 25ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
newstm.in
Next Story