பள்ளிகளில் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினால் நடவடிக்கை..!
கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகும். ஆனால், ஒரு சில பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் வைக்கப்படும்.
இந்நிலையில், கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.