1. Home
  2. தமிழ்நாடு

அதிரடி! பெண் ஊழியர்கள் பணியாற்ற நேரக் கட்டுப்பாடு!!

அதிரடி! பெண் ஊழியர்கள் பணியாற்ற நேரக் கட்டுப்பாடு!!


காலை 6 மணிக்கு முன்பும், இரவு 7 மணிக்கு பிறகும் பெண் ஊழியர்களை பணி செய்யுமாறு வற்புறுத்தக்கூடாது என உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில், பெண்களுக்கான வேலை நேரம் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தை தாண்டி பணியாற்ற வேண்டுமானால் குறிப்பிட்ட அந்தப் பெண் கையொப்பமிட்ட கடிதம் அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படி வேலை செய்யும் பெண்ணுக்கு இலவச போக்குவரத்து, உணவு, வீட்டுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்க வேண்டும்.

அதிரடி! பெண் ஊழியர்கள் பணியாற்ற நேரக் கட்டுப்பாடு!!

பெண்கள் பணியாற்றும் இடத்தில் கழிவறை வசதி, உடை மாற்றும் அறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர், மின்விளக்கு வேலை செய்யும் இடத்தில் இருக்க வேண்டும்.

பணிசெய்யும் இடத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ள மாநில அரசு, அதனை கம்பெனி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக தங்களின் உரிமைகள் குறித்து பணியாற்றும் பெண்கள் அறிந்திருக்க வேண்டும் என்றும், விதிமுறைகளை அலுவலகத்தில் ஒட்ட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like