1. Home
  2. தமிழ்நாடு

சாலையோரம் வாகனம் நிறுத்துபவர்களா நீங்கள்! உஷார்!!

சாலையோரம் வாகனம் நிறுத்துபவர்களா நீங்கள்! உஷார்!!


இனி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறிய சாலையின் ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. சிலர் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதை உணராமல் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றுவிடுகின்றனர்.

ஆனால் வாகனங்களின் வரத்து சாலையில் அதிகரிக்கும் போது அவ்வாறு சாலையோரம் வாகனங்கள் நிறுத்தியிருப்பது சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது.

அதற்காக கோவை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாலையோரம் வாகனம் நிறுத்துபவர்களா நீங்கள்! உஷார்!!

மாநகராட்சிக்குட்பட்ட 30 சாலைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அந்த சாலைகளின் ஓரம் நிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் என கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் வாகன நிறுத்த கட்டண நிர்ணயத்துக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like