1. Home
  2. தமிழ்நாடு

கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன் - மு.க.ஸ்டாலின் இரங்கல்..!

1

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,

கேரள அரசியலில் ஆழமாக பதியும் புரட்சிகர மரபை விட்டுச் சென்றுள்ளார் அச்சுதானந்தன்; கொள்கை ரீதியான அரசியல், பொது சேவை உணர்வை கொண்ட பெருந்தலைவர் அவர். தமிழ்நாட்டு மக்கள் சார்பாக செவ்வணக்கம்.அவரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கும், சிபிஐஎம் பணியாளர்களுக்கும், கேரள மக்களுக்கும் எனது இரங்கல்.. எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார் என அதில் பதிவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல் - மந்திரி தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்..

கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like