ஊத்துக்குளி அருகே கோர விபத்து! தனியார் பேருந்து கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி!

திருப்பூரில் இருந்து சத்தியமங்கலம் சென்ற தனியார் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இப்பேருந்து ஊத்துக்குளி அருகே கவுண்டம் பாளையம் பகுதியில் இன்று காலை 8.30 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கண்டெய்னர் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்ற போது நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்துக்கு உள்ளானது .
இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது.
இந்த விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர். பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலர் பலத்த காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.