1. Home
  2. தமிழ்நாடு

வெள்ளி விழாவில் கோர விபத்து! விஸ்டெக்ஸ் ஏசியா CEO உயிரிழப்பு!

1

மும்பையைச் சேர்ந்த சஞ்சய் ஷா, கடந்த 1999ஆம் ஆண்டு விஸ்டெக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். விஸ்டெக்ஸ் நிறுவனம் சுமார் 300 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. கோகோ கோலா, டெல், டவ், அடோப், சோனி, யமஹா, ஹெச்பி என உலகளாவிய நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது இந்த நிறுவனம்.

இந்நிலையில்,  விஸ்டெக்ஸ் ஆசியா பசிபிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் ஷா, கடந்த வியாழக்கிழமை அன்று, விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவை நினைவுகூரும் நிகழ்வில் பங்கேற்றார். இந்த நிகழ்வு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின்போது சி.இ.ஓ சஞ்சய் ஷா மற்றும் விஸ்டெக்ஸ் நிறுவன தலைவர் விஸ்வநாத் ராஜு தட்லா ஆகியோரை ஏற்றிச் சென்ற இரும்புக் கூண்டு சரிந்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். கூண்டின் இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்தார்.


 

null


 

Trending News

Latest News

You May Like