1. Home
  2. தமிழ்நாடு

வாடிக்கையாளரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற ஏ.சி. மெக்கானிக்!

வாடிக்கையாளரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற ஏ.சி. மெக்கானிக்!


பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏ.சி. மெக்கானிக் ஒருவர் தனது வாடிக்கையாளரின் குழந்தையை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த சோனு என்ற ஏசி மெக்கானிக்கின் வாழ்வாதாரம் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் தவறான வழியில் பணம் சம்பாதிக்க எண்ணிய சோனு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்.

தனது வாடிக்கையாளரான ஒரு பணக்கார பெண்ணுக்கும், சோனுவுக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது 11 வயது மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார் சோனு. அதன்படி, அந்த சிறுவன் பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது இரண்டு பேர் அவனை கடத்திச் சென்றனர்.

அதன் பிறகு அவர்கள் அச்சிறுவனை காசிப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் தங்கியிருந்தனர். இதனிடையே குழந்தையின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சிறுவனின் தாயார் சோனுவை அடையாளம் காட்டினார். சோனுவின் மொபைல் எண்ணை வைத்து தேடுதல் வேட்டை நடத்தி போலீசார் சோனுவை கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like