1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மார்ச் முதல் வாரத்தில் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம் ?

1

சென்னை மக்களுக்கு வரப் பிரசாதமாகவும் இருப்பது புறநகர் மின்சார ரயில் சேவை. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

என்னதான் மாநகர பேருந்துகளும் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டாலும் அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்படுவதால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி மக்கள் இந்த மின்சார ரயில் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு அடுத்த பெரும் பிரச்சனையாக இருப்பது கோடை வெயில். இந்த நிலையில் சென்னையில் முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் கூடிய மின்சார ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கமெண்ட் ஏசி மின்சார வேலை தயாரித்து வழங்க சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலைக்கு ரயில்வே வாரிய முத்தரவிட்டதை அடுத்து இங்கு 12 பெட்டிகள் கொண்ட இயேசு மின்சார ரயில் பணிகள் துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

மொத்தம் 22 பெட்டிகளில் முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் 4914 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரயில் பெட்டி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து தாம்பரம் மார்க்கத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் ரயில் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வரும் மார்ச் மாதத்தில் சென்னையின் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில் சேவை துவங்கும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி மார்ச் முதல் வாரத்தில் துவங்கி வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியிருப்பதாவது, "ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் சேவை துவக்கி வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை ஏசி மின்சார ரயில் சேவையை காணொளி மூலம் துவங்கி வைப்பார் என தெரிவிக்கின்றனர். எனினும் இன்னும் தேதி இறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like