ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டி..!
பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து ஏ.சி.சண்முகம் களம் இறங்க உள்ளார். தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் இங்கு திமுக - பாஜக நேரடியாக மோதுகிறது.