அனைத்து ரயில்களிலும் ஏசி பெட்டி கட்டணம் குறைப்பு..!

இந்தியாவில் பல்வேறு மாநில வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரெயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வந்தே பாரத் ரெயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 'வந்தே பாரத்' உள்ளிட்ட சில ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைக்கப்படுவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் பயணிக்கும் ரெயில்களில் கட்டண சலுகையை வழங்கவும் ரெயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 23 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்களை விட இந்த ரயிலில் வேகம் அதிகமாக இருக்கும். சென்னை- கோவை இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதிக வேகம் காரணமாக பயண நேரம் குறைவதால் இந்த ரயில்களில் மக்கள் ஆர்வம் காட்டினாலும் கட்டணம் அதிகம் என்பதால் இதில் பயணம் செய்ய யோசிக்கிறார்கள்.
இந்த ரயிலில் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இவை சென்னை ஐசிஎஃப்பில் தயாராகின்றன. இத்தனை அம்சங்கள் இருந்தாலும் அதிக கட்டணத்தால் மக்கள் யோசிக்கிறார்கள். எனவே இந்த வந்தே பாரத் ரயிலை சாதாரண மக்கள் பயன்படுத்தும் நிலை இல்லாமல் உள்ளது. இதனால் ரயில்களின் கட்டணத்தை குறைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்திய ரயில்வே தற்போது வந்தே பாரத் ரயில் கட்டணத்தை ஒரு சில குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் கொண்ட வழித்தடங்களில் குறைக்க திட்டமிட்டுள்ளது. அதாவது 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணம் செய்யும் ரயில்களில் கட்டணம் குறைக்கப்படும்.
சாமானியர்களும் வந்தே பாரத் போன்ற சொகுசு ரயில்களை பயன்படுத்த இந்திய ரயில்வே இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தூர்- போபால், போபால்- ஜபல்பூர், நாக்பூர் - பிலாஸ்பூர் ஆகிய வழித்தடங்களில் மக்கள் கூறும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே இந்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் கட்டணம் முதலில் குறைக்கப்படும் என தெரிகிறது. கடந்த 30 நாட்களாக இந்த வழித்தடங்களை ஆய்வு செய்த போது இந்தூர்- போபால் வரை 29 சதவீதம் பேர் மட்டுமே இந்த ஏசி சேர் காரை பயன்படுத்தினர். அது போல் போபால் - இந்தூர் வழித்தடத்தில் 21 சதவீதமாக இருந்தது. போபால்- ஜபல்பூர் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை 21 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. தற்போது இந்தூர் - போபால் வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலை ஏசியில் ரூ 95- ஆகும்,
எக்ஸூகியூடிவ் நாற்காலியில் ரூ 1,535 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து 25 சதவீதம் குறைகிறது. அது போல் நாக்பூர்-பிலாஸ்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ரூ.2,045 மற்றும் ஏசி நாற்காலி கார் கட்டணம் ரூ.1,075. போபால் முதல் ஜபல்பூர் வழித்தடத்தில் ஏசி நாற்காலி காருக்கு ரூ.1,055 மற்றும் எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காருக்கு ரூ.1,880 கட்டணமாக பெறப்படுகிறது. குறைந்த பயணிகள் பயன்படுத்தி வரும் காரணமாக கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனால்தான் விலையை குறைக்க முதல் நடவடிக்கை வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒப்புதல் வந்த பிறகு கட்டணம் மாற்றியமைக்கப்படும். அதே வேளையில் எங்கெல்லாம் 50 சதவீதத்திற்கு மேல் பயணிகள் பயணிக்கிறார்களோ அங்கெல்லாம் அதே கட்டணம் தொடரவுள்ளது.