பிரியாணி மேன் அபிஷேக் ரபி சென்னையில் கைது..!
கடந்த ஒரு வாரமாக உணவு ரிவ்யூ செய்யும் இர்ஃபான், டெய்லர் அக்கா உள்ளிட்டோரை பிரியாணி மேன் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.இவர் நேற்றைய தினம் தனது யூடியூப் லைவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக 3 மணி நேர வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதனால் பிரியாணி மேனை பலர் விமர்சித்திருந்தார்கள். இதையடுத்து அவர் யூடியூப்பில் நேரலையில் தற்கொலை செய்து கொள்வது போல் ஒரு வீடியோவை போட்டு தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன்தான் என சொல்லிக் கொண்டே தற்கொலைக்கு முயன்றார். அப்போது நெட்டிசன்கள் அவரது தாயை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லியதும், அவர் போய் காப்பாற்றியுள்ளார்.
இந்த நிலையில் பிரியாணி மேன் அபிஷேக் ரபியை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.