1. Home
  2. தமிழ்நாடு

கண்கலங்க வைக்கும் புகைப்படம் : "அபிநய சரஸ்வதி", "கன்னடத்து பைங்கிளி" சரோஜா தேவியின் கடைசி புகைப்படம்..!

1

கன்னடத்து பைங்கிளி , அபிநய சரஸ்வதி என அனைவராலும் அழைக்கப்படும் சரோஜா தேவி பெங்களுரில் பிறந்தார். சிறு வயது முதல் சரோஜா தேவி நடனம் பயின்று வந்துள்ளார். அப்போதிலிருந்தே அவருக்கு கலைத்துறை மீது விருப்பம் இருந்துள்ளது. அதன் பிறகு 1955 ஆம் ஆண்டு வெளியான மஹாகவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் சரோஜா தேவி. அவர் அறிமுகமான முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

அதுமட்டுமல்லாமல் சரோஜா தேவிக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. நடிப்பு, நடனம், அபிநயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்தார் சரோஜா தேவி. அதைத்தொடர்ந்து 1957 ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் சரோஜா தேவி. அதில் வரும் ஒரு நடன காட்சி அவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது.

 

தமிழில் மட்டுமல்லாமல் சரோஜா தேவி பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். அந்த காலகட்டத்தில் தமிழ் -ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்த ஒரு சில நாயகிகளில் சரோஜா தேவி மிக முக்கியமானவராக இருந்தார். எனவே பல மொழிகளில் சரோஜா தேவி நடித்து வந்ததால் அவருக்கு பல மொழி ரசிகர்கள் இருந்தனர். அந்த சமயத்தில் தான் சரோஜா தேவியின் நடிப்பை பார்த்து எம்.ஜி.ஆர் அவர்கள் அவரை நாடோடி மன்னன் படத்தில் நடிக்க வைத்தார்.

அந்த படம் சரோஜா தேவிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எம்.ஜி.ஆர் படத்தில் நாயகியாக நடித்தது ஒருபக்கம் இருந்தாலும், எம்.ஜி.ஆர் படத்தில் நடித்து தனி கவனம் ஈர்த்தார் சரோஜா தேவி. அதன் பிறகு தமிழில் முன்னணி நாயகியாக உயர்ந்தார். அதன் பிறகு தமிழ் -தெலுங்கு என பல மொழிகளில் மாறி மாறி நடித்து ஹிட் கொடுத்தார். இந்திய திரையுலகிலேயே வெற்றிகரமாக பல வருடங்கள் வலம் வந்த நாயகிகளில் சரோஜா தேவி மிக முக்கியக்கமானவர் ஆவார்.

சரியாக 200 படங்களில் சரோஜா தேவி நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகும். மேலும் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, கலைமாமணி உட்பட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார் சரோஜா தேவி. கடைசியாக தமிழில் சூர்யாவின் நடிப்பில் வெளியான ஆதவன் என்ற திரைப்படத்தில் நடித்தார் சரோஜா தேவி. அப்படத்திலும் சரோஜா தேவி தனியாக தன் அசாத்திய நடிப்பினால் ஸ்கோர் செய்தார்.

அதன் பிறகு பல வருடங்கள் கழித்து 2019 ஆம் ஆண்டு ஒரு கன்னட படத்தில் கேமியோ ரோலில் நடித்தார் . அதைத்தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்த சரோஜா தேவி காலமானார். பெங்களுரில் அவரின் உயிர் பிரிந்தது. 87 வயதாகும் சரோஜா தேவி காலம் கடந்தும் போற்றப்படும் ஒரு நடிகையாக இருந்து வருகின்றார்.

அதன் காரணமாகவே அவரின் பிரிவை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவரது மறைவு திரைத்துறைக்கு ஒரு பேரிழப்பு என்றே கூறலாம். மீன் போன்ற கண்களால் அனைவரது நெஞ்சங்களையும் கொக்கி போட்டு இழுத்த அவரது இறுதி புகைப்படம் வெளியாகி, பார்ப்பவர்களை கண்கலங்கச் செய்துள்ளது.




 

Trending News

Latest News

You May Like