அப்துல் கலாமின் கல்லூரி நண்பர் கொரோனாவால் பலி !!

அப்துல் கலாமின் கல்லூரி நண்பர் கொரோனாவால் பலி !!

அப்துல் கலாமின் கல்லூரி நண்பர் கொரோனாவால் பலி !!
X

ஊட்டி அருகே கடநாடு கிராமத்தை சேர்ந்தவர் போஜா கவுடர் ( 90 )இவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, 13ம் தேதி ஊட்டி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால் , கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

உயிரிழந்த போஜா கவுடர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கல்லுாரி நண்பர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 2006ல் ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார்.

அப்போது, போஜா கவுடரை மேடைக்கு அழைத்து, கல்லுாரி நினைவுகளை கூறி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின், மற்றொரு நண்பர் சம்பத் குமார் என்பவரும் சேர்ந்து, பெண் குழந்தைகள் கல்விக்காக, சேவ் அவர் டாட்டர்ஸ் என்ற அமைப்பை துவக்கினர். கடநாடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா கூறுகையில் ;

சேவ் அவர் டாட்டர்ஸ் தொண்டு நிறுவனத்தின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக, போஜா கவுடர் இருந்தார். 50 மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வந்தார். அவரது மறைவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Newstm.in

Next Story
Share it