கைவிட்டுப் போன 12 கோடி ரூபாய் சம்பளப் படம்! வருத்தத்தில் விஜய் சேதுபதி!!

கைவிட்டுப் போன 12 கோடி ரூபாய் சம்பளப் படம்! வருத்தத்தில் விஜய் சேதுபதி!!

கைவிட்டுப் போன 12 கோடி ரூபாய் சம்பளப் படம்! வருத்தத்தில் விஜய் சேதுபதி!!
X

தமிழைக் கடந்து தெலுங்கு, மலையாள படங்களிலும் தடம் பதித்து விட்டார் விஜய் சேதுபதி. கடந்த வருடம் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் குணச்சித்திர நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது உப்பண்ணா எனும் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் 5 மொழியில் நடிக்கும் புஷ்பா எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. அதற்கு கிட்டத்தட்ட 12 கோடி வரை சம்பளம் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக புஷ்பா படத்தில் நடிக்க முடியவில்லை. பெரிய சம்பளம் என்பதால், தமிழில் அட்ஜெஸ்ட் செய்யப்பார்த்தும் யாரும் விட்டுக்கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. ஆனால் புஷ்பா படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில், விஜய் சேதுபதி இன்னும் முயற்சி செய்து வருவதாக தெரிகிறது. 

newstm.in

Next Story
Share it