விற்பனையில் அசத்தல்..! தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை 115 கோடிக்கு விற்பனை..!
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் உப பொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நிகழாண்டில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறியதாவது:
ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் உட்பட ஆவின் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகளான நெய் பாதுஷா, நட்ஸ் அல்வா, காஜூ பிஸ்தா ரோல், காஜூ கட்லி, மோதி பாக் ஆகியவையும், கார வகைகளான ஆவின் மிக்சர், பட்டர் முருக்கு ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் இனிப்பு வகைகள் உட்பட ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.101 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை பல்க் புக்கிங் செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஆவினில் தற்போது வரை ₹115 கோடிக்கு விற்பனை செய்துள்ளது
தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை அணுகி அவர்களுக்கு தேனைஎன இனிப்பு மற்றும் கார வகைகள் விநியோகிக்கப்பட்டது. தற்போது வரை சுமாரி ரூ.115 கோ இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட ஆளின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.10 கோடி அதிகமாரும்.