1. Home
  2. தமிழ்நாடு

ரூ.2 தள்ளுபடி: ஆவின் நிறுவனம்

Q

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தற்போது தினமும் 35 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 1.5 கோடிக்கு மேல் நுகர்வோர்களை கொண்ட ஆவின் நிறுவனம் 4.5 லட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரமாக தெரிகிறது. இந்த பால், கொழுப்பு சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, பல வகைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர வெண்ணெய், நெய், தயிர், மோர் உட்பட 150க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

குறிப்பாக பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா), மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செறிவூட்டம் செய்யப்பட்ட பால் டிலைட் பால் (பர்ப்பிள்) போன்ற பால் வகைகளை அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 33 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்து வருகிறது.மேலும் ஆவின் நிறுவனம் அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில் UHT முறையில் தயார் செய்யப்பட்ட சமன்படுத்தப்பட்ட பால் (UHT TM Milk) 450ml மற்றும் 150ml அளவுகளில் பின்வரும் சிறப்பு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், யு.எச்.டி. முறையில் தயாா் செய்யப்பட்ட 450 மில்லி லிட்டா், 150 மில்லி லிட்டா் அளவிலான பால் பாக்கெட்டுகளின் விலையில் தலா ரூ. 2 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.30-க்கு விற்பனையான, 450 மி.லி. பால் பாக்கெட்ரூ. 28-க்கும், ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்ட 150 மி.லி. பால் பாக்கெட் ரூ. 10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீவிர வெப்பத்தால் சமன்படுத்தப்பட்ட இந்தப் பாலை 90 நாள்கள் வரை குளிா்பதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்தலாம். எவ்வித வேதிப் பொருள்களும் சோ்க்கப்படாமல் நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்யப்படுவதால் தொலைதூர பயணங்களுக்கு எடுத்துச் செல்ல உகந்ததாகும்.

Trending News

Latest News

You May Like