1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இலவசமாக ஆவின் பால் விநியோகம்!

Q

மிக்ஜாம் புயலால் கொட்டித் தீர்த்த கனமழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பால் அடிப்படைத் தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள பேரறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று (டிச.06) மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. புயல் பாதிப்பு சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றும் மூடப்பட்டது.
இதனிடையே, மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மீண்டும் சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது. நேற்று (டிச.05) 136 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் இன்று முழுவீச்சில் 250 விமானங்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like