1. Home
  2. தமிழ்நாடு

ஐஸ்கிரீம் விலையை அதிரடியாக உயர்த்திய ஆவின்..!

1

 ஆவின் நிறுவனம் ஐஸ்கிரீம்களின் விலையை ரூபாய் 2 முதல் ரூபாய் 5 வரை உயர்த்த்தியுள்ளது.

அதன்படி 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 65 எம்எல் சாக்கோபாரின் விலை 5 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோல் 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 125 எம்எல் வெண்ணிலா Ball ஐஸ்க்ரீம் 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 100 எம்எல் கிளாசிக் கோன் வெண்ணிலா ஐஸ்க்ரீம் 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் கோன் சாக்கோலேட் ஐஸ்க்ரீமும் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like