1. Home
  2. தமிழ்நாடு

ஆவின் பண்ணைக்கு ரூ.5.10 கோடி அபராதம் விதிப்பு..!

Q

அம்பத்துார் ஆவின் பால் பண்ணை உள்ளிட்ட தொழிற்சாலை கழிவுகளால், சென்னை கொரட்டூர் ஏரி மாசடைந்து வருவதை தடுக்க உத்தரவிடக்கோரி, பசுமை தீர்ப்பாயத்தில், 'கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம்' மனு தாக்கல் செய்தது.

இதை விசாரித்த தீர்ப்பாயம், 'சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கொரட்டூர் ஏரியில் விடப்படுவதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும். சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அம்பத்துார் ஆவின் பால் பண்ணை, அனுமதி அளவைவிட அதிகமாக, 3.75 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் செயல்படவில்லை.

'இதனால், பண்ணையில் இருந்து அதிக அளவு கழிவுநீர் வெளியேறி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அம்பத்துார் ஆவின் பால் பண்ணைக்கு, 5.10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது' என்றார்.

அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர், அபராதத் தொகை மிக அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'இது தொடர்பாக ஆவின் நிறுவனமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, வரும் 16ம் தேதி தள்ளிவைத்தனர்.

Trending News

Latest News

You May Like